உள்ளூராட்சிமன்ற தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நேற்று (16) நடைபெற்றது.
இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிர்வாக விடயங்கள் பற்றி மாத்திரமே கலந்துரையாடப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் தேர்தல் தினத்தை மாற்றுவது குறித்து கட்சிகளின் செயலாளர்களை அழைத்து கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக எதிர்வரும் 23ஆம் திகதி அனைத்து அரசியல் கட்சிகளுடைய செயலாளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். (AV)
No comments