Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

தொடர்ந்தும் சிகரம் தொடுகிறது குருநாகல் அஸ்மா ட்ரவல்ஸ் நிறுவனம்

-சப்ராஸ் அபூபக்கர்-

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான குருநாகல் அஸ்மா ட்ரவல்ஸ் நிறுவனம் கடந்த பல வருடங்களுக்கு மேலாக நம்பகமான சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பை தேடி வருபவர்களை மிகச்சிறப்பான முறையில் வரவேற்று அவர்களுக்கு பொருத்தமான தொழில்வாய்ப்புக்களையும் அமைத்துக் கொடுக்கிறது அஸ்மா ட்ரவல்ஸ்.

நாடுபூராகவும் ஏராளமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் நிலையம் இருந்தாலும் குருநாகல் அஸ்மா ட்ரவல்ஸ் நிறுவனம் நடைமுறையில் மிகவும் வித்தியாசமானது.

ஒரு மனிதன் தனது வறுமையைப் போக்கவே வெளிநாடு செல்கிறான் என்பதை மனதில் ஆழமாக வைத்திருக்கிறார் அஸ்மா ட்ரவல்ஸ் நிறுவனத்தின் உரிமையார் அஷ்ஷேக் ரிஹான் நளீமி அவர்கள். அதனால் தான் இவர்களுடைய முகவர் நிலையத்துக்கு வருபவர்களுக்கு குடிபானம் முதல் சாப்பாடு வகைகளையும் இலவசமாக வழங்கி அவர்கள் பசி, தாகம் போக்கியதன் பிறகு தான் அடுத்த கட்ட அவர்களது வெளிநாட்டுப் பயணம் தொடர்பில் பேசப்படுகிறது.

அஸ்மா ட்ரவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அஷ்ஷேக் ரிஹான் நளீமி ஒரு கல்விமான். ஓர் ஊடகவியலாளர், ஒரு சமூக சிந்தனையாளர், மறைமுகமான உதவித்திட்டங்களை கல்விக்கும், ஏழைகளுக்கும் வாரி வழங்கிக் கொண்டிருக்கக்கூடியவர். அவரது வெற்றியின் சக பங்காளியாக அவரது மனைவியும், அவர் நிறுவனத்தில் கடமை புரியும் ஊழியர்களும் தோள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அஸ்மா ட்ரவல்ஸ் ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரையில் எந்தவித தங்குதடையுமின்றி மிகச் சிறப்பான சேவையை தம்மை நாடி வருபவர்களுக்காய் செய்து கொண்டிருக்கின்றது. அதனால் தான் இதுவரையில் பல்வேறு விருதுகளை தனதாக்கிக் கொண்டிருக்கின்றது. அதிலும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கும் சிறந்த விருதுகளை பலமுறை அஸமா ட்ரவல்ஸ் பெற்றிருக்கின்றது.

அந்த வரிசையில் கடந்த வாரம் மீண்டும் குருநாகல் அஸ்மா ட்ரவல்ஸ் 4 Stars நான்கு நட்சத்திர விருதை தனதாக்கியுள்ளது.

தம்மை நம்பி நாடி வரும் வாடிக்கையாளர்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் துன்பங்கள் அறிந்து அவர்களுக்கு மனிதாபிமான முறையில் உதவிகளை செய்வதாலேயே அஸ்மா ட்ரவல்ஸ் மீண்டும் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தது என்றால் அதுதான் நியாயமான உண்மையும் கூட.

எனவே வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் மிக நம்கமான சேவையை வாடிக்ககையாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அஸமா ட்ரவல்ஸ் நிறுவனத்தை வாயார வாழ்த்துவதோடு தொடர்ந்தும் சிகரம் தொட வேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.


No comments