Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  எரிபொருள் விலை குறைந்தாலும் பேக்கரி உற்பத்தி விலைகளைக் குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைப்பதற்கு எரிபொருள் விலைக்குறைப்பு மாத்திரம் போதாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்புக்கு ஏற்ப பாணின் விலையை 100 ரூபா வரையில் குறைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(DC)





No comments