(வந்தாறுமூலை நிருபர்)
காலநிலை மாற்றம் மற்றும் களப்பு நீர் ஏரிகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று 10/03/2023 வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக துறைசார் நிபுணர்கள் தமது ஆய்வுகளை அறிக்கை செய்தனர்.
வெள்ள காலங்களில் முகத்துவாரத்தில் உள்ள ஆற்றுவாய் வெட்டுதல் தொடர்பாகவும், களப்பின் உயிர் பல்வகைமையை பாதுகாப்பதற்கும், களப்பு நிலங்களை சட்டவிரோதமாக மூடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் மற்றும் வெள்ளப்பெருக்கின் பாதிப்பை குறைப்பதற்கும் களப்பில் சேர்கின்ற மண்ணை அகற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் போன்றன தொடல்பில் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
மற்றும் களப்பு பகுதியில் கண்டல் தாவரங்களை நட்டு உயிர் பல்வகைமையை அதிகரித்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் களப்பினை பாதுகாப்பதற்காக உயர் மட்ட அதிகாரிகள் கொண்ட விசேட குழு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி, சசிகலா புண்ணியமூர்த்தி, பொறியியலாளர்கள், பதவி நிலை அதிகாரிகள், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், துறைசார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8TVgpvO2wRmMTT96WKh-Nn2jZkEjefhE3vbJArMLBSgIvhqwvAB48sZf_YOSvNo85sSzLJoRFAL_RILQ4Vc9QSPWaHaVtfcrujsDpAFQFdw5ne8h0hEKOwmrhFVR_kLanMlzX6JPiOY8lfF4qhHr6AlfOvH5hbU92IW0YY7sRYY3IRw6UnZkEJNDwkQ/s16000/IMG-20230310-WA0354.jpg)





No comments