ஜேர்மனியின் ஹாம்பர்க் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேவாலயத்தில் துப்பாக்கி சூடு
ஜேர்மனியின் ஹாம்பர்க்(Hamburg)நகரில் உள்ள தேவாலயத்தில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது எனது ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பயங்கர சம்பவத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறியபடாத தாக்குதல்தாரிகள் இருந்தாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையின் படி, Grossborstel மாவட்டத்தின் Deelboege தெருவில் உள்ள ஒரு தேவாலயத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இதில் பலர் பலத்த காயமடைந்து இருப்பதுடன், சிலர் உயிரிழந்து இருப்பதாகவும் ட்விட்டரில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்களா என்பது போன்ற தகவல்களை பொலிஸார் வெளியிடாத நிலையில், ஆறு பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாகவும், குற்றவாளி தப்பியோடி இருப்பதாகவும் ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேரழிவு எச்சரிக்கை செயலியைப் பயன்படுத்தி, அந்தப் பகுதியை சுற்றி “தீவிர ஆபத்து” எச்சரிக்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பகுதியை தவிர்க்க வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
No comments