தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும், வட-கிழக்கு மாகாணங்களின் காணி உரிமைகள் வேறு தரப்பினருக்கு வழங்கப்படல் போன்ற பிரச்சினைகளைக் காரணம் காட்டியும் இந்த ஹர்த்தால் நடத்தப்படவுள்ளது.
பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் அன்றைய தினம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து கடைகளையும் அடைத்து வாகன போக்குவரத்தை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அரச ஊழியர்களும் இந்த முழு ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை இந்த ஹர்த்தாலுக்கு இலங்கை தமிரசுக் கட்சியும் தமது ஆதரவினை வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.(AV)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSBrpwJKajFxZegReGIelZYXmJALqeDm6fojPm6cnPqN_sQfultFPanI6ZhSg2m5AQ56yt_NXedJ8qcRNmaitN9ZMBdR77Uw__-_tDLVlvJdFXH0AQFElg3TjldXYJtUmcHHjycElzN85iTCCvZsZz_RRWdPghF8zMUJQ-NoOyIeGcrzhzzRZREyzQ/s16000/C3CD4C2B-3479-431D-B15C-706EB0CE5958.jpeg)





No comments