Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

பதிவியிலிருந்து இராஜினாமா செய்யுங்கள்


தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய இளையோர் வலைப்பந்து போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்ட இலங்கை வலைப்பந்து அணியின் தெரிவை இரத்துச் செய்து மீண்டும் அதற்காக தேர்வை மேற்கொள்ளும்படி தேசிய விளையாட்டு தெரிவுக் குழு விடுத்த கோரிக்கையை தேசிய வலைப்பந்து தெரிவுக் குழு நிராகரித்துள்ளது.

பதவியில் இருந்து இராஜினாமா செய்வதைத் தவிர அதற்கு வேறு எந்த மாற்றும் இல்லை என்று தேசிய விளையாட்டு தெரிவுக் குழுவின் செயலாளர் அர்ஜுன பெர்னாண்டோவுக்கு தேசிய வலைப்பந்து தெரிவுக் குழு தலைவி தமயந்தி ஜயதிலக்க அறிவித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.



தென் கொரியாவின் ஜயோன்ஜு நகரில் அடுத்த ஆசிய இளையோர் வலைப்பந்து போட்டி வரும் ஜூலை 10 தொடக்கம் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அதற்காக 12 வீராங்கனைகள் மற்றும் மூன்று மேலதிக வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை குழாம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



என்றபோதும் தேசிய வலைப்பந்து தெரிவுக் குழு பரிந்துரைத்த இலங்கை அணிக்கு தேசிய கனிஷ்ட வலைப்பந்து பயிற்சியாளர் அமல்கா குணதிலக்கவின் அதிருப்தி வெளியாகி இருந்தது.



அணியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் வீராங்கனைகள் தொடர்பில் தமக்கு திருப்தி அடைய முடியவில்லை என்று அவர் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அணித் தேர்வை மீண்டும் மேற்கொள்ளும்படி தேசிய விளையாட்டுத் தெரிவுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தேர்வு செய்யப்பட்டிருக்கும் அணி ஏற்கனவே தமது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments