உஸ்தாத் அல்முஃப்தி முஹம்மது சௌமி கரீம் (அர்ரஷாதி) அவர்கள் எழுதிய மனிதவள மேலாண்மை தொடர்பான அரபு மொழி மூலமான "கனிகளைப் பறிக்கும் நேரம்" நூல் இன்று ஞாயிறு கலை 9.00 மணி அளவில் மூதூர் பேர்ல் கிரான்ட் மண்டபத்தில் நத்வதுல் உலமா அரபுக் கலாசாலையின் தலைவர் உஸ்தாத் எம்.எம்.கரீம் அவர்களின் தலைமையின் நடைபெற்றது.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வின் அதிதிகளாக அஷ்ஷெஹ் எம்.ரியாஸ், அஷ்ஷெஹ் எம்.சபூர் மௌலவி அவர்களும், நூல் நயவுரையை நஹீப் நிஸாத் நளீமி அவர்கள் மேற்கொண்டதோடு நன்றியுரையை புஹாரி ரீஷா அவர்களும் வழங்கியிருந்தனர்.
A5 அளவில் 110 பக்கம் கொண்ட இந்நூல் 105 உள்ளடக்கங்களை சுருக்கமாகவும், தெளிவாகவும் குறிப்பிடும் நூலாக இந்நூலைப் பார்க்க முடியும். கனிகளைப் பறிக்கும் நேரம் நூலானது மனித மேலாண்மை தொடர்பான அரபு மொழியில் வெளிவந்துள்ள இலங்கையின் முதலாவது நூலாக கருதலாம்.
அப்துல் கரீம் செளமி உஸ்தாத் அவர்கள் பல்துறைசார் ஆளுமை கொண்ட ஒருவர். சிறந்த வாசிப்பாளரும், விமர்சகருமாவார். குறிப்பாக அரபு மொழியில் விசேட பாண்டித்துவம் பெற்றதோடு சர்வதேச ரீதியாக பல்வேறு நாடுகளில் அரபுக்கலாசாலையில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றி வருக்கின்றார்.
புத்தாக்க சிந்தனை மையம் என்ற நிறுவனம் ஊடாக பல்வேறு துறைசார், சமூக நலன் வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றார். இதேவேளை உஸ்தாத் கே.செளமி அவர்கள் அரபுலக பத்திரிகைகள் பலவற்றுக்கு பல்தரப்பட்ட தலைப்புகளில் ஆக்கங்களை பிரசுரம் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(செய்தி பிரதி செய்யப்பட்டது)
No comments