20,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் இன்று(10) நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
11,250 மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு வருமென விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தட்டுப்பாடின்றி உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உர கொள்வனவிற்காக விவசாயிகளுக்கு 60% கூப்பன்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்திருந்தார். (DC)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmBEEVPEdRSuwyllQKo8QpUYKbSbPj2kY2_hTUCl9Lebk-ZE0XnN6z82-3KUd50bv-FFf9CjsGKzEdklvoQ5pHR1oDx5SX3aMiKE13vvkiwkubsrfNBD5f9Ch4rvjo25uB009-DSnrCeQONC2QQhCOTfIrAX7ROF6ZKw5rISeiWhSKk3uD7K1gNHwPnA/s16000/143797_shutterstock_723175018.jpg)



No comments