2021 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ‘கோல்டன் கேட் கல்யாணி’ பாலத்தின் மின் விளக்கு அமைப்பு, அதிக அளவில் திருடப்பட்டதாலும், மின்சாரக் கேபிள்கள் சேதம் அடைந்ததாலும் தற்போது செயற்படுவதில்லை என அறிவிக்கப்படுகிறது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், ஜூலை 14ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தப் பிரச்சினையை எடுத்துரைத்தார். அதேபோன்று இந்த அசம்பாவிதத்தால் ஏற்பட்ட இழப்பு சுமார் 270 மில்லியன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்டுநாயக்க மத்திய மற்றும் தெற்கு நெடுஞ்சாலைகள் போன்ற ஏனைய நெடுஞ்சாலைகளிலும் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவது குறித்து பணிப்பாளர் நாயகம் கவலை தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற திருட்டுகள் நடைபெறுவதைக் கண்டால் 1969 என்ற அவசர எண்ணில் தொடர்பு கொண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
‘கோல்டன் கேட் கல்யாணி’ பாலம், ரூ. 50 பில்லியன் செலவில் 2021 நவம்பர் 21ம் திகதியன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (NW)
No comments