இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெறுகிறது. இந்த போட்டி இலங்கை நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது.
உலகக்கோப்பை தொடருக்கு முன்பு நடைபெறுவதால் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனினும் ரோகித் சர்மா, விராட் கோலி,ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்த வீரர்களுக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் தான் மூன்று கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. இன்றைய ஆட்டம் யாருக்கு முக்கியமானது இல்லையோ ஸ்ரேயாஸ் ஐயருக்கு தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஏனென்றால் காயத்திலிருந்து விடுபட்டு மீண்டும் காயம் அடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு இது கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. இதில் அவர் சிறப்பாக விளையாடி ரன் குவித்தால் மட்டுமே உலகக் கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கும்.
இதனால் ஸ்ரேயாஸ் இன்றைய ஆட்டத்தில் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் இறங்குவாரா இல்லை ஐந்தாவது இடத்தில் இறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் சூரியகுமார் யாதவ் உலகக்கோப்பை தொடரில் கிட்டத்தட்ட சூரியகுமார் இடம்பிடிப்பது உறுதி ஆகிவிட்டது. எனினும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் சூரியகுமார் யாதவும் இன்றைய ஆட்டத்தில் தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்திய ஆக வேண்டும்.
நடப்பாண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று கோல்டன் டக் ஆகி ரசிகர்கள் மனதில் ஏமாற்றத்தை சூரியகுமார் யாதவ் கொடுத்திருக்கிறார். தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் என்பது போல் சூரியகுமார் யாதவுக்கு இழந்த பெருமையை மீட்க ஒரு நல்ல வாய்ப்பு இந்த தொடரில் அமைந்திருக்கிறது.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கக் கூடியவர் நமது தமிழக வீரர் அஸ்வின் ஆவார். உலகக்கோப்பை தொடருக்கு வெயிட்டிங் லிஸ்டில் இருந்த அஸ்வினுக்கு தற்போது ஆர் எஸ் டிக்கெட் கிடைத்திருக்கிறது. இதில் அவர் சிறப்பாக செயல்பட்டால் உலகக்கோப்பை தொடருக்கான பர்த் கன்ஃபார்ம் ஆகிவிடும். இதனால் இன்றைய ஆட்டம் அஸ்வினுக்கு வாழ்வா சாவா என்று ஆட்டமாக கருதப்படுகிறது.
No comments