Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

30 வருட கால ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் ஆசிரியர் எம் எம் ஏ காதர்

சம்மாந்துறை நிருபர் -ஏ. கே. ஹஷான் அஹமட் -


சம்மாந்துறை தேசிய பாடசாலையில் பெளதீகவியல் ஆசிரியராக எல்லோரினதும் மனங்களிலும் இடம்பிடித்த கடமையில் கண்ணியமாகவும்,நேர்மையாகவும் செயற்படுபவருமான எம்.எம்.ஏ காதர் நேற்று (26) தனது 31 வருடகால ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி யூ. நஜீபா ஏ.றஹீம் தலைமையில் நடைபெற்றது.


சம்மாந்துறையை பிறப்பிடமாக கொண்ட இவர் 1963ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் திகதி முஹம்மட்  தம்பி  மற்றும் ஆசியா உம்மா ஆகியோரின் சிரேஸ்ட  புதல்வராக பிறந்தார். 


இவர்  ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை அல் முனீர் வித்தியாலயத்தில் கல்வி கற்று தரம் 6ல் கல்வி கற்பதற்காக  1976ம் ஆண்டு  சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் கல்வியை தொடர்ந்தார். உயர்தரத்தில் கணிதப்பிரிவில் கல்வி கற்ற இவர் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு கணித பீடத்தில் தெரிவு செய்யப்பட்டார். 

பெளதீகவியல் ஆசிரியராக 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நியமனம் பெற்றார்.

மேலும் கிழக்கு அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளராகவும் 2004ம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி  பணியாற்றினார் .

நீர்ப்பாசன அமைச்சு இணைப்பாளராக 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி பணியாற்றினார்.

நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை இணைப்பாளராக 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் திகதி பணியாற்றினார்.

அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி இணைப்பாளராக 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி பணியாற்றினார்.

மாவனெல்லை சாஹிரா பாடசாலையிலும் 5 வருடம் கற்பித்துள்ளார்.

இவர் ஆசிரியர் சேவையில் 30வருடங்கள் 03 மாதம் 16நாள் சேவையாற்றியுள்ளார்.

இவர் தனது சேவைக்காலத்தில்  பெளதீகவியல் ஆசிரியராகவும்,விஞ்ஞானப் பிரிவுத் தலைவராகவும்,உயர்தர பிரிவு   விஞ்ஞானம்,கலை,வர்த்தகம்,தொழினுட்ப பாடங்களுக்கான இணைப்பாளராகவும் கடமையாற்றி இருந்தார்.





No comments