Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

பும்ராவுக்கு என்ன நடந்தது? ஆடிப்போன விளையாட்டு உலகம்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளர் பும்ரா தன் மோசமான பந்துவீச்சை பதிவு செய்து இருக்கிறார்.


2023 உலகக்கோப்பை தொடர் வர இருக்கும் நிலையில், பும்ராவின் பந்துவீச்சு மோசமாகி விட்டதா? என ரசிகர்கள் கவலை கொள்ளத் துவங்கி விட்டனர்.


ஆஸ்திரேலியவுக்கு எதிரான முதல் போட்டியில் ஆடிய பும்ரா சிறப்பாகவே பந்து வீசி இருந்தார். அந்தப் போட்டியில் பும்ரா 10 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.


இரண்டாவது போட்டியில் ஆடாமல் அவர் விலகினார். பின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பும்ரா பங்கேற்றார். அந்தப் போட்டியில் வார்னர், மிட்செல் மார்ஷ் ஜோடி பும்ரா பந்துவீச்சை பதம் பார்த்தது. அதிலும் மிட்செல் மார்ஷ் அவரின் இரண்டு ஓவர்களில் மட்டும் 32 ரன்கள் குவித்தார்.


பும்ரா இந்தப் போட்டியில் முதல் ஐந்து ஓவர்களில் 51 கொடுத்தார். விக்கெட்டும் எடுக்கவில்லை. அதன் பின் தன் கடைசி ஐந்து ஓவர்களில் அவர் சிறப்பாக பந்துவீசி 30 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.


மொத்தமாக 10 ஓவர்களில் 81 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார் பும்ரா. இது ஒருநாள் போட்டிகளில் இவரது இரண்டாவது மோசமான பந்துவீச்சு. 2017இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 9 ஓவர்களில் 81 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தியதே பும்ராவின் மோசமான பந்துவீச்சு. ஆனால், அப்போது தன் பும்ரா ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி இருந்தார்.


தற்போது உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வரும் அவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மோசமாக பந்து வீசி இருப்பது அவரது ஃபார்ம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், முதல் ஐந்து ஓவர்களில் செய்த தவறை, தன் கடைசி ஐந்து ஓவர்களில் திருத்தியது பும்ராவின் மீதான நம்பிக்கையை தாங்கிப் பிடிக்கிறது.


இந்தப் போட்டியில் பும்ரா மற்றுமொரு மோசமான பந்துவீச்சு சாதனையை செய்துள்ளார். ஒரே ஓவரில் 19 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதுவே பும்ரா ஒரே ஓவரில் விட்டுக் கொடுத்த அதிக ரன்கள். இதற்கு முன்பும் இதே போல இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 19 ரன்கள் கொடுத்துள்ளார்.




No comments