இலங்கையில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவின் கணக்கீட்டின்படி டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரி்த்துக்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கணக்கீட்டின்படி பதின்மூன்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் தொற்று வலயங்களாக இம்முறை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் பதிமூவாயிரத்து முன்னூற்று இரண்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 13,170வது டெங்கு நோயாளர்களும் களுத்துறை மாவட்டத்தில் நான்காயிரத்து எண்பத்து மூன்று டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இம்மாதத்தில் மாத்திரம் தொள்ளாயிரத்து அறுபது டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்க கூடும் எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. (TWN)
No comments