Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

மொஹாலியில் சிக்கவிருக்கும் அஸ்வின் - இந்தியா , அவுஸ்திரேலியா போட்டி நாளை


இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மொஹாலியில் தொடங்க உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது.


இந்த நிலையில் உலககோப்பை தொடரில் அஸ்வின் இடம்பெறுவாரா மாட்டாரா என்பதற்கு நாளைய போட்டியில் பதில் தெரிந்து விடும். அஸ்வின் தன்னுடைய திறமையை நிரூபிக்கும் வகையில் இந்த போட்டியில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அஸ்வினுக்கு மிகப்பெரிய கண்டம் நாளை மொஹாலியில் காத்திருக்கிறது. இதற்கு காரணம் மொஹாலி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமாகும். இங்கு வேகப்பந்துவீச்சாளர்கள் சுழற் பந்துவீச்சாளர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். குறிப்பாக அணியில் இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் வீரர்கள் இந்த மைதானத்தில் கண்டிப்பாக பந்து வீசவே கூடாது.


அந்த அளவுக்கு இது பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கம் என்று அழைக்கப்படும் மைதானம் ஆகும். தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கிறது. இது எந்த அளவிற்கு பேட்டிங்கிற்கு சாதகம் என்றால் இங்கு முதலில் பேட்டிங் செய்து ரன்கள் எடுத்தாலே 350 ரண்களுக்கு மேல் அடிக்கப்படும். பிறகு இரண்டாவது சேசிங் செய்யும் அணி அந்த இலக்கை தொட்டு விடும் அளவுக்கு ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். பந்து பேட்டிற்கு நன்றாக வரும் என்பதால் வீரர்கள் பவுண்டரி சிக்ஸர்கள் என விளாசுவார்கள். ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கில் படு பயங்கரமாக இருக்கும். இதனால் நாளை ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சின்னாபின்னமாக மாறாமல் இருந்தால் சரி.

இதனால் நாளை ஆட்டத்தில் அஸ்வின் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தால் அதை வைத்து அவரை எடை போடக்கூடாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் நாளை ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அடித்து மேய்ந்து விட்டால் அது இந்திய அணியின் பவுலர்களின் உத்வேகத்தை சீர்குலைக்கும்.




No comments