Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பெரும் அச்சுறுத்தல் - 11 ஆயிரம் பொலிஸார் குவிப்பு


இந்தியா - பாகிஸ்தான் மோதும் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிக்கு அதிரடியாக 11,000 போலீசார் மற்றும் சிறப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


அந்த முக்கியமான உலகக்கோப்பை போட்டிக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை உலகிலேயே எந்த கிரிக்கெட் போட்டிக்கும் இப்படி ஒரு இமாலய பாதுகாப்பு கொடுக்கப்பட்டதில்லை. இதற்கு காரணமாக ஒரு மின்னஞ்சல் ஒன்றை சுட்டிக் காட்டுகிறார்கள் காவல்துறையினர்.


முன்னதாக மும்பை காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் நரேந்திர மோடி விளையாட்டரங்கை வெடி வைத்து தகர்ப்போம் எனவும், எங்களுக்கு 500 கோடி பணமும், சிறையில் இருக்கும் பெரிய தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய்-ஐ விடுவிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மின்னஞ்சல் ஐரோப்பா கண்டத்தில் இருந்து பிழையான வாக்கியங்களுடன் வந்திருந்தது.


இது உண்மையான மிரட்டல் அல்ல. ஒரு ஏமாற்று வேலையாக இருக்கலாம் என காவல்துறை அப்போதே கூறியது. எனினும், இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு கனடாவில் இயங்கும் தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் (SFJ) தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன், கிரிக்கெட் உலகக் கோப்பையை உலகப் பயங்கரவாதக் கோப்பையாக மாற்றுவோம் என்று மிரட்டி இருந்தார்.


இந்த மிரட்டல்களை தொடர்ந்து சுமார் 1 லட்சம் ரசிகர்கள் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு வருவார்கள் என்பதால் தீவிர பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்படுள்ளது. 7,000-க்கும் மேற்பட்ட காவலர்களுடன், 4,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


இது குறித்து அஹமதாபாத் காவல்துறை உயர் அதிகாரி மாலிக் கூறுகையில், "போட்டியின் போது ஏதேனும் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அவசரநிலைகளை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவற்றின் குழுக்கள் நகரத்தில் நிறுத்தப்படும்." என்றார்.

மேலும், "மாநில ரிசர்வ் போலீசாரின் (எஸ்ஆர்பி) 13 நிறுவனங்களைத் தவிர, எங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாக நாங்கள் மூன்று நிறுவனங்களின் விரைவு நடவடிக்கைப் படையை ஈடுபடுத்துவோம். நகரின் வகுப்புவாத உணர்திறன் பகுதிகளை RAF கண்காணிக்கிறது. மக்களுக்கு உதவ நெரிசல், நாங்கள் ஏற்கனவே வெளியேற்றும் திட்டத்தை தயாரித்துள்ளோம், மேலும் மைதானத்தில் ஒத்திகையும் நடந்து வருகிறது." என்றும் கூறினார்.




No comments