சுங்கத் திணைக்களத்திற்கு அதிகாரிகள் மற்றும் சுங்க பரிசோதகர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் 138 உதவி சுங்க அத்தியட்சகர்கள் மற்றும் 45 சுங்கப் பரிசோதர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சேர்ப்புக்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த செப்டம்பர் 22 ஆம் திதி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் எதிர்வரும் அக்டோபர் 16ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அதற்கான விண்ணப்பிக்கும் காலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கான விண்ணப்பம் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு 21 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இந்த பதவிகளுக்காக இணைக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தமது விண்ணப்பத்தை அனுப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (தினகரன்)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJdV1ui2v2OE6M4F3ZeSsGjb69F8O3tYn0EXIm5QaUMWIDtH4KdzBAIqrQGn1Gt4uZVed05WxM_umri6kpHh7JbXktNNzoUkgUEGP1F57kCkdKk7xyM32DSTj7gT1v7EbdeQTkKZOJ0l_Pzv3poxXDekLrOY7njvEV8j9GRfR1fUq0NHD_hVlXWtwX014b/s16000/Government-employees.jpg)




No comments