Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

சில பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை - மீறினால் சட்ட நடவடிக்கை

நாட்டில் ஒரு முறை மற்றும் குறுங்கால தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.


இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய உறிஞ்சு குழாய்கள் (ஸ்ட்ரோவ்), கத்திகள், கரண்டிகள், முள்ளுக்கரண்டிகள், தட்டுகள், கோப்பைகள், ப்ளாஸ்டிக் மாலைகள் மற்றும் இடியப்பத் தட்டுகள் போன்ற பொருட்களை இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், இலவசமாக அல்லது கண்காட்சிக்காக வழங்குதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீறி செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகாரச் சபையின் தலைவர் சுபுன். எஸ். பத்திரகே தெரிவித்துள்ளார்.


குறித்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், இன்று முதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். (தினகரன்)


No comments