Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப் போகும் தமிழ் பிரதிநிதி - யோசனை முன் வைப்பு

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழர் ஒருவரை வேட்பாளராக களமிறக்க, திட்டமிட்டுள்ளதாக புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று முன்தினம் -(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதாகக்  கூறி பதவிக்கு வரும் ஜனாதிபதிகள், பின்பு தமது நிலைப்பாட்டிலிருந்து மாறி விடுகின்றனர்.


தற்போது ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்ரமசிங்க கூட 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக கூறினார்.


பின்னர், அந்நிலைப்பாட்டை அவர் கைவிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப்போகும், வரை தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பது எங்களுக்கு தெளிவாக தெரிகிறது. எனவே,அடுத்து வரும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்று பட்டு தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றார். (TKN)


 


No comments