Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

ஹமாஸ் தாக்குதலை நான் நியாயப்படுத்தவில்லை - ஐ.நா . பொதுச் செயலாளர் தெரிவிப்பு

ஹமாஸ் தொடர்பான தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.


பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும் இடையே போர் தாக்குதலானது 3 வது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்த போர் நடவடிக்கையில் மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


இதற்கிடையில் ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் போர் குறித்து தெரிவித்த கருத்து வைரலானது.


அதில், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் ஒரு எதிர்வினை தான் என அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்ததாக தகவல் வெளியானது.


இதனால் இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு தரப்பினர் மத்தியில் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் ஹமாஸ் தொடர்பான தன்னுடைய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹமாஸ் படையினரின் பயங்கரவாதத்தை தான் நியாயப்படுத்தவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான தகவல்கள் முழுவதும் பொய்,  உண்மையில் நான் எதிர் மாறான கருத்தை தான் கூறினேன் என்று ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்தாக பிபிசி குறிப்பிட்டுள்ளது. 




No comments