Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கான காரணத்தை வெளியிட்டார் பாபர் அசாம்

பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.


சென்னையில் நடந்த இந்தப் போட்டிக்கான பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என முன்பே கணிக்கப்பட்டு இருந்தது.


பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சில் துவக்கம் முதல் தடுமாறிய பாகிஸ்தான் அணி கடைசி 10 ஓவர்களில் அதிக ரன் எடுத்ததால் 282 ரன்கள் குவித்தது.


ஆனால், ஆப்கானிஸ்தான் அணி சேஸிங் செய்த போது பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 49வது ஓவரில் சேஸிங்கை வெற்றிகரமாக முடித்தது.


இந்த நிலையில், போட்டி முடிந்த உடன் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரமிஸ் ராஜா சர்ச்சையை கிளப்பும் வகையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் சென்னை பிட்ச் குறித்த சர்ச்சையான கேள்வியை எழுப்பினார்.


இந்தப் போட்டி நடந்த சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் எப்போதுமே சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும். பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருக்கும். உதாரணமாக அதிக பவுண்டரி அடிக்கப்படும் ஐபிஎல் போட்டிகளில் கூட சென்னையில் மட்டும் குறைவாக பவுண்டரிகள் அடிக்கப்படும். ஐபிஎல் தொடரிலும் கூட சென்னையில் ஆடும் போது அனைத்து அணிகளும் கூடுதல் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும். அதே போல, அந்த பிட்ச் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாகவே இருக்கும்.


இந்த காரணத்தால் தான் பிசிசிஐ, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் போட்டியை வேண்டுமென்றே சென்னையில் நடத்த திட்டமிட்டதாக ஒரு புகாரை பாகிஸ்தான் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதை வைத்து பாகிஸ்தான் அணி இரண்டாவதாக பந்துவீசும் போது சுழற் பந்துவீச்சு எடுபடவில்லை. ஆப்கானிஸ்தான் அணிக்கு சாதகமான சூழல் இருந்தது. அதுதான் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணமா? என ரமீஸ் ராஜா கேள்வி எழுப்பினார். ஆனால், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், "அப்படி நான் கருதவில்லை. எங்கள் ஸ்பின்னர்கள் எப்போது அழுத்தம் கொடுத்தாலும், ஒரு பவுண்டரியை விட்டுக் கொடுத்து அந்த அழுத்தத்தை வெளியேற்றினார்கள்" என கூறினார்.


ஆப்கானிஸ்தான் அணி சுழற் பந்துவீச்சில் வலுவான அணி. அந்த அணியில் எப்போதுமே மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அதே போல, பாகிஸ்தான் அணியும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. ஆனாலும் அந்த அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் அணியினரைப் போல சரியாக செயல்படவில்லை. அதை சரியாக சொல்லி இருக்கிறார் பாபர் அசாம்.



No comments