Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

ஹமாஸ், இஸ்ரேலிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த துருக்கி தயார்

இஸ்ரேலிய பிணைக் கைதிகளை பாதுகாப்பாக விடுவிக்க கோரி ஹமாஸ் அமைப்பினருடன் துருக்கி ஜனாதிபதி அர்துகான் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார்.


இஸ்ரேல் மீது பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை திடீர் தாக்குதலை தொடங்கினர்.


மேலும் காசா எல்லையை கடந்து இஸ்ரேலின் எல்லைப் புற பகுதிகளில் உள்ள இஸ்ரேலிய மக்களை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக கடத்தி சென்றனர்.

ஹமாஸ் அமைப்பினரின் இந்த திடீர் தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு மத்திய கிழக்கில் உள்ள சில நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


அதே சமயம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.




இதற்கிடையில் உலக நாடுகள் மத்தியில் ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்து சென்ற இஸ்ரேலிய மக்களை உடனடியாக விடுவிக்கவும் கோரிக்கை எழுந்து வருகிறது.



இந்நிலையில் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை பாதுகாப்பாக விடுவிக்க கோரி, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருடன் அமைதி பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தம் செய்ய துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் அர்துகான் தனது  முயற்சியை முன்னெடுத்துள்ளார்.


அமைதியை திரும்ப கொண்டு வர இது தொடர்பாக  துருக்கி ஜனாதிபதி அர்துகான் தனது மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார்.


கடந்த சனிக்கிழமை இது குறித்து சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அல்ஜீரிய ஜனாதிபதி அப்தெல் மஸ்ஜித் டெபோன் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார் என அனடோலு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, மோதல் போக்கை விரைவாக முடிவுக்கு கொண்டுவர துருக்கியின் சக்தி அதிகாரங்களால் முடிந்த அனைத்தையும் கொண்டு மத்தியஸ்தம் மற்றும் நியாயமான நடுவர் மன்றங்களாக இருக்க ஏற்பாடு செய்வோம் என துருக்கியின் சார்பாக ஜனாதிபதி அர்துகான் தெரிவித்துள்ளார். 


No comments