Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகள் - டிசம்பர் 13 என்ன நடக்கும்?

2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 45 மேலதிக வாக்குகளால் நேற்று (நவ. 21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நேற்று  பி.ப 6.00 மணிக்கு  இடம்பெற்ற இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது 'வரவு செலவுத் திட்ட உரை' நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் கடந்த 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 14ஆம் திகதி முதல் நேற்று  (21) வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது.

இதற்கு அமைய குழு நிலை விவாதம் இன்று (22) முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதற்கு அமைய 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி புதன்கிழமை பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.




No comments