அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக புதிய களனி பாலத்தை மூன்று கட்டங்களாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் நாளை (01) காலை 9 மணி முதல் டிசம்பர் 4 ஆம் திகதி காலை 6 மணி வரையிலும்
இரண்டாம் கட்டத்தின் கீழ் டிசம்பர் 8 ஆம் திகதி காலை 9 மணி முதல் டிசம்பர் 11 ஆம் திகதி காலை 6 மணி வரையிலும்
மூன்றாம் கட்டத்தின் கீழ் டிசம்பர் 15 ஆம் திகதி காலை 9 மணி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி காலை 6 மணி வரையிலும் புதிய களனி பாலத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுள்ளனர். (NF)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqrQ27ScHFU2fnJYgSx4MxdG3ADEql7EiURmrIdGUwIUQpLy4WHGu_OH2BjOlf78MNNbV53ruf3yS4iZVhkHep4fZQVE-gVH2cviH_1P1oi9rPOrKZukjA_wV8MTSa6Qeo5N080phpSS1dw-WX0B2WQCpgO2Io-A9mqI4DpQdhW8nNtDdonshcDxjt7ZfQ/s16000/kelani-bridge.jpg)




No comments