பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான, சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் , குறித்த பிரேரணையில் பயங்கரவாத தடைச்சட்டம் 1979 இல் பொதுப் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் இரண்டாம் பாகத்தில் அவசரகால சட்ட ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நானும் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்று நாடு தழுவிய கையெழுத்து பிரச்சாரமொன்றை முன்னெடுத்தோம்.
அதேபோன்று சர்வதேச சமூகத்திலும் இந்த சட்டத்தினை இரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தின.
எனினும் இலங்கை அரசாங்கம் அந்த செயற்டபாட்டை முன்னெடுப்பதற்கு தவறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (LSN)
No comments