நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் 06 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்திருந்தார்.
இந்த திட்டத்திற்கு இடையூறு செய்யும் எந்த தரப்பினரிடமும் தானும் பொலிஸ் திணைக்களமும் ஒரு போதும் அடிபணியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 6 மாதங்களில் நாட்டில் குற்றச்செயல்களை குறைப்பதற்காகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டிஇருந்தமை குறிப்பிடத்தக்கது. (ADN)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlgNqSHJOMoomcD_lEyNappoj4Cfl9ATxd-sSP5-uK4Dz9hKb8jI9mPF4m3QhI3Uu7Bd8eWhq5QS1M5zmx71KsUKYojV16jKlM8QfqZJFu32lom3AyZe22IFWeWxaHj5NnLCSVh0JPogH42xAHjTypeFuxnVjHAkppTi7p3Qrv1fe-YL1hMFB2vrdZZ3fW/s16000/Tiran-Alles.jpg)



No comments