புத்தளம், ஆனமடுவ பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட போது, லொறி மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவ-ரத்னபால தேசிய பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே நேற்று (04.04.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மஹவுஸ்வெவ வெலேவவ வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் குடும்பத்தின் மூத்த பிள்ளையான, ஈக்ஷனா காயத்மி என்ற 13 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மாணவி பாடசாலையில் அகில இலங்கை நடனப் போட்டிக்கான பயிற்சியில் கலந்துகொண்டு, வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறுவதற்காக நடைபாதை வழியாக ஓடிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. (LSN)
No comments