ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று (26) சுகயீன விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களையும் கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தப்படும் என அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இன்று ஆசிரியர்கள் சுகயீன விடுப்பு தெரிவிப்பதால் பல பாடசாலைகளில் மாணவர்களை பாடசாலைக்கு வர வேண்டாம் எனவும் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
பிள்ளைகளின் இரண்டாம் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதோடு இதன் காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இதேவேளை, அரச நிறைவேற்று உத்தியோகத்தர் சங்கப் பிரதிநிதிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கை இன்று இரண்டாவது நாளாகவும் அமுல்படுத்தப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் எச்.ஏ.எல்.உதயசிறி தெரிவித்தார்.
(DC)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB8MeJfFr-Le7iDUJbH6qoIJkuYvWbu9eWpPs4G36vUZmR5b4AspAajNSLfRqxkfMrBNJB55uwU2ho5Yv5SurhdTOwmCS2xrqBfU5YMaU4rh777QiSa4Qol89_TnTi7z9Ye-zHFc5tSGpUwzFGqElJMwc1lvluBLPIftNzcOp05OY72b7_nktun-JQdSHj/s16000/1623316357-Health-trade-unions-to-go-ahead-with-strike-action-L.jpg)



No comments