திட்டமிட்டபடி 2024 ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் 2024, நவம்பர் 25, முதல் டிசம்பர் 20 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவிக்கப்பட்டு பரீட்சை ஒத்திவைக்கப்படலாம் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளது.
பரீட்சையை தாமதப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்ததை அமைச்சகம் ஒப்புக்கொண்டிருந்த போதிலும், வினாத்தாள்கள் அச்சிடுதல், பிராந்திய சேகரிப்பு மையங்களை நிறுவுதல், பரீட்சை மையங்களை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் ஏற்கனவே உயர்தரப் பரீட்சை அட்டவணை 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதாகவும், மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு தயார்படுத்துவதற்கு போதுமான நேரத்தை வழங்குவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது.
எனினும் இந்த அறிவித்தல் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதால், குறிப்பாக 2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அட்டவணையில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்தக் காரணிகளின் அடிப்படையில், உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் மாதம் நடைபெறும் என கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. (NW)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuzfO3wBOF9fzxb0ghcJx8cXbvKQhyMpU8VvbEzHq7v7CcHi4iVR2DffliVfball6r-yf-TOOadGnBuzoqUXAnnkFj92vYoBXF76UGnxf3BBncfwkPW8OWCfQX6wU1_aDTxSsolplXXqK4rsY_mVfXIUzk7AuetfZt-c2RCug6gz4HgJp1cU1CnvHuS5Q/s16000/a_l(1)-692907_850x460.jpg)
.jpeg)
.png)



No comments