Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

புதிய அமைச்சரவையில் இன விகிதாசாரத்தில் பொடுபோக்கு - மன உளைச்சலில் இலங்கை மக்கள்


 புதிய அமைச்சரவை இன விகிதாசாரத்தின் படி நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா. துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈபி.ஆர்.எல்.எப் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,


“புதிய அரசு மக்களின் ஆணையை பெற்று பல சதாப்தங்களுக்கு பின்னர் கூடுதலாக ஊழலுக்கு எதிராக மாற்றத்தை விரும்பியவர்கள் வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.


நல்ல கொள்கைகளையுள்ள நல்லாட்சி அரசு ஆட்சிய அமைக்க போகின்ற நிலையில் சிறுபான்மையினர் பாதிக்கப்படமால் இருக்க வேண்டுமாயின் விகிதாசார அடிப்படையில் அமைச்சுக்களை நியமிக்கப்படவேண்டும்.


அது தவறும் பட்சத்தில் அவர்கள் எவ்வாறு நல்லாட்சியை நடைமுறைபடுத்துவார்கள் என்ற சந்தேகம் மக்களுக்கு மத்தியில் தொற்றி நிற்கும்.


எனவே, நல்ல கொள்கைகளை முன்வைக்கின்ற அடிப்படையில் இந்த புதிய அரசு 25 அமைச்சரவையில் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் 19 பெரும்பான்மை அமைச்சர்களும் 6 தமிழ் அமைச்சர்களும் தெரிவு செய்யப்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.  (LSN)






No comments