கிரி/ அரக்கியாள முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பௌதீக வள அபிவிருத்தியின் முக்கிய வேலைத்திட்டமாக நேற்று (2024/11/ 21) புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட காரியாலயத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.
இது பாடசாலையின் அபிவிருத்திக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பாடசாலையின் உயிர் நாடியான SDEC இன் பௌதீக வள அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஓர் முக்கிய அம்சமாகும்.
இந்நிகழ்வு பாடசாலையின் கௌரவ அதிபர் MHM அமீர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நிறைவு பெற்றது.
இதில் பாடசாலையின் சகல ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக பங்கு கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந்த முக்கிய நிகழ்வை நடத்துவதற்கு ஒத்துழைத்த SDEC இன் கௌரவ செயலாளர் மற்றும் அதன் அங்கத்தவர்கள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் குலாம் தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.
No comments