Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

சம்பளமின்றி பணியாற்ற இணக்கம் - அநுர அரசில் வியக்க வைக்கும் தகவல்



ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.


அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் சம்பளம் பெற்றுக் கொள்ளாது தமது கடமைகளை முன்னெடுக்க ஆயத்தமாக உள்ளனர் என கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார்.


இது தொடர்பிலான ஆரம்ப இனக்கப்பாடு ஏட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



ஊடக சந்திப்பு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 76 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்வது என்பது மக்களுக்கு வெறும் கனவாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் விழுந்து விடாது என சுசந்த குமார மேலும் தெரிவித்துள்ளார். (LSN)




No comments