இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1888 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி அநுர கருணாதிலக்க ஆகியோர் தலைமையில் நேற்றையதினம் (22.11.2024) இந்த கைச்சாத்தாகிடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த வீடுகள் பேலியகொட, தெமட்டகொட, மொரட்டுவ மற்றும் மஹரகம பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மூத்த கலைஞர்களுக்கு 108 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டமும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது. (LSN)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrISAUhsxKDy3U74-cQWuyAT8vWQUwXPcW4hYypcA8rtZE7nHHH59t82Km8diB_t69DChmtyMAEZnrw_tWA261eUR-gQp32hyphenhyphenaD8J8eQkUTtDYgekZFjoWXrqSiUFLq5hZ230dzbMMfeJZhanWB6hgoL5hDSJbQmp3fJ2A-IBjiS4NJDjB0S8VWPGst8Q/s16000/OIP%20(68).jpeg)
.jpeg)
.jpeg)


No comments