நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காயம் போன்ற பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட பயிர்களுக்கு மேலதிகமாக மலையக மற்றும் தாழ்நில மரக்கறி விவசாயிகள் மற்றும் பழ விவசாயிகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கும் ஓரளவு நிவாரணம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
இதன்படி, ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக அழிவடைந்த பயிர்களுக்கு 40,000 ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை குறைந்த பின்னர் பயிர் சேதம் தொடர்பான விபரங்களை சேகரித்து நட்டஈடு வழங்கப்படும்.
இந்நிலையில் அழிவடைந்த பயிர்களை மீள பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு இலவச பயிர் விதைகள் வழங்கும் முறைமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் கூறியுள்ளார். (LSN)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeLRFySVvUfo8ully9htXu_t_iSghRHJ9sRpyaIGJyaH9E_0eARda_N4mP3mXMvVoDLrHq-UdvtNY2datHwng8IlxpSorvcfoDoeZ3g6jN5_uQirTJ3kAPLGsLVBIToEzAavTIciXTQtGfa-92Isg8AkZ22LZS7_3_saNxL4ZdCoBP9708u54oguW_S-A/s16000/1732887709-crop-damage.jpg)
.jpg)



No comments