2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.
குறித்த பரீட்சையானது அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2 ஆயிரத்து 312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இதன்படி இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 33,185 பரீட்ச்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,793 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவதாகப் பரீட்சைகள் திணைக்களத்தின் உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா கூறியுள்ளார்.
இந்நிலையில், பரீட்சார்த்திகள் 30 நிமிடங்களுக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்குப் பிரவேசிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
மேலும், கல்விப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லான உயர்தரப் பரீட்சையை நாளை எழுதும் அனைத்து மாணவர்களும் வெற்றியடைய உளமார வாழ்த்துவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் நிலையில், வடக்கு மாகாணத்திலிருந்து 17 ஆயிரத்து 212 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இதனை கூறியுள்ளார்.(LSN)
No comments