இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) காரணமல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக பலர் கூறுவதாக இராஜாங்க அமைச்சர் சத்துரங்க அபேசிங்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அந்த கூற்றுகள் தவறானவை என்று அவர் கூறியுள்ளார். 1977ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட மோசமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்குள் இலங்கை ஏற்கனவே திவாலாகி விட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், 2022இல் ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அவரை பதவியில் இருந்து வெளியேற்றினர்.
இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சவே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு இன்றும் சுமத்தப்பட்டு வருகிறது. (LSN)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs2UzXc5fxe1ubJ9pUq-nYL3hpR43hRhIXdQ8sRM-ILnefW1vnZyMd5cJX8m9Z4IXP_mI12FkyXNRVN5lkS782WLiHlaZ3zzkoI2Y_O1eJg_Yy-H57KCMigRfwLAjk2lCUI_qw8aOvEcsp9j4cFCDG4mzwylX52UnM2rmgvB5bqbwpKvQ7veycNBVy92w/s16000/OIP%20(52).jpg)
.jpg)



No comments