சிரியாவின் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பசார் அல் ஆசாத் ரஸ்யாவில் உள்ளதாகவும்ரஸ்ய அரசாங்கம் அவருக்கு அடைக்கலம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசாத் தனது குடும்பத்தினருடன் மொஸ்கோ வந்தார் என கிரெம்ளின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (VKN)
No comments