Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

கொழும்பு மாவட்ட தெற்குப் பிராந்திய பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு நாள் செயலமர்வு




முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கொழும்பு மாவட்ட தெற்கு பிராந்திய பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ் தெஹிவலை, கல்கிஸ்ஸை பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் தெஹிவலை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகியவற்றுடன் இணைந்து, தெஹிவலை முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் (01) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 


இச்செயலமர்வில் சுமார் 35 பள்ளிவாசல்களின்‌ 150 க்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 


இந்த கருத்தரங்கில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள், பள்ளிவாசல் எவ்வாறு ஒரு சமூக மையமாக செயற்படுவது, இலங்கை வக்பு சபை, இலங்கை வக்பு நியாய சபை மற்றும் முஸ்லிம் தர்ம நம்பிக்கை பொறுப்புகள் (Trust) ஆகியன தொடர்பில் நம்பிக்கையாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டன.



முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அறிமுகமும் அதன் சேவைகள் தொடர்பான தொடக்க உரையை திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் நடாத்தினார்.

இக் கருத்தரங்கில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சார்பாக வளவாளர்களாக திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹ்மத், வக்பு பிரிவின் அதிகாரி அஷ்ஷேக் எம்.ஐ.முனீர், வக்பு நியாய சபை பதில் செயலாளர் எம்.என்.எம். ரோஸன், ஆகியோர் கலந்து கொண்டு தெளிவுரைகளை வழங்கினர். 


மேலும் இந்தக் கருத்தரங்கின் வரவேற்பு உரையை வக்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம் ஜாவித் வழங்கினார்.


மேலும் இச் செயலமர்வில் விஷேட அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி கலந்து கொண்டதுடன் நம்பிக்கையாளர்ளின் சிறப்புகள் மற்றும் கடமைகள் தொடர்பாக சிறப்பு உரையையும் வழங்கியதுடன், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனும் கலந்து சிறப்பித்தார்.


இந்நிகழ்வை  கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களுக்குப் பொறுப்பான அஷ்ஷேக் எம்.ஐ.மஸீன் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






No comments