2024 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக, பெறுபேறுகளின் மதிப்பீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். (Ada Derana)
No comments