Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

77 வது சுதந்திர தின நிகழ்வுகளுக்குத் தயாராகும் இலங்கை - சில கட்டுப்பாடுகளும் வருகிறது

 


இந்த ஆண்டு, 77 ஆவது சுதந்திர தின நிகழ்வில், ஜனாதிபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் 21 பீரங்கி வேட்டுகள் இடம்பெறாது என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.


இதேவேளை இவ்வருட சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.



இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 77 ஆவது சுதந்திர தின விழாக்கள் குறைக்கப்பட்ட செலவுகள், குறைவான விருந்தினர்கள் மற்றும் செயற்பாடுகளுடன் நடத்தப்படும்.


இதன்படி, நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களின் எண்ணிக்கை 3,000 இலிருந்து 1,600 ஆக குறைக்கப்படும்.


இதன்படி, நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களின் எண்ணிக்கை 3,000 இலிருந்து 1,600 ஆக குறைக்கப்படும். (Tamilwin )




No comments