Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

அநுர அரசாங்கத்தின் நடவடிக்கையால் வியப்படைந்த சர்வதேச நாணய நிதியம்!




 சர்வதேச நாணய நிதியக் குழு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து வியப்படைந்ததாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி(Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.


மேலும், வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை மூன்று மாதங்களில் மீட்டுள்ளோம் என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.


இவ்வாறு மூன்று மாதங்களில் நாட்டை மீட்டு எடுத்தமைக்காக மகிழ்ச்சியடைய வேண்டுமென தெரிவித்துள்ளார்.



தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


துறைமுகத்திற்கு வரும் எரிபொருள் கப்பலுக்கு பணம் செலுத்த முடியாதிருந்த நிலைமையை மாற்றியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


சர்வதேச நாணய நிதியத்துடன் பத்து நாட்களில் பேச்சுவார்த்தைகளை முடிந்ததாகவும், டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டுமென திட்டமிட்டு இவ்வாறு பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.


தமது குழுவின் அர்ப்பணிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியம் பாராட்டியதாக சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். (Tamilwin )




No comments