தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா என்னும் வேலைத்திட்டத்திற்கமைய, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் குறித்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் மேலதிமாக பொருத்தப்படும் அலங்கார பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அவற்றை அகற்றாவிடின் உரிய சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை, இந்த கட்டுப்பாடு தொடர்பில் சாரதிகள் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.(Tamilwin )


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjd8l_dLK1JI0gV2c8WIlHQ-TeG2eisp-HaQwvaqOANdlyTNXLywz4qK_DRsEkX_t7bTfhtnV5_enCGMJi08y5X-MMj7Wm1IKvEQ2U2udCvn-3odjRA09nRcjuKIA1mdMThOdwzGjH2_-uVzdBlTVEL-jQCJa4LrAg7-uXHvJHiPy5mt3pCSWUvVXq0-h4/s16000/1000040495.jpg)




No comments