Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் கடமையேற்பு

 


இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 8 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 40 வது நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மகா சங்க உறுப்பினர்களின் செத்பிரித் பாராயணங்களுக்கு மத்தியில், சிரேஷ்ட அதிகாரி தனது கடமையை ஏற்றுகொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.


இந்த நியமனத்திற்கு முன்பு, அவர் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக பணியாற்றினார். முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.(News.lk)


No comments