புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை இன்று (27) முதல் பெப்ரவரி 6 வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக இணையவழி முறைமையின் மூலம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
அதற்கமைய, பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.(adaderana )


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis4BK_r2OF1hwtZUqQQkogz_lLkYwteg-RM4qT1rFW7OyuZZC8x-CgpvUINHvRHe1j9Eat9Gw7zZfNEjUKstK35p2RVcEP_ddcxF5qB-PYzgCOMGjL0kPQSDTj2gGNZPzfB4LVPuSbTFqy-V0H2va5Koh-J5CZ7S0USG8CvDpFsqRs1HNIQsrLPJCHdlI/s16000/WhatsApp%20Image%202025-01-26%20at%2021.34.57.jpeg)


No comments