Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

தேசிய இளைஞர் படையணிக்கு புதிய பணிப்பாளர் நியமனம்



 தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நேற்று (20) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேயிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.


இலங்கை திட்டமிடல் சேவையில் விசேட தர அதிகாரியாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட இவர், முன்னர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளராகவும், சுகததாச உள்ளக விளையாட்டரங்க அதிகாரசபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.


அத்துடன், அவர் சிறிது காலம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதித் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.


தேசிய இளைஞர் படையணியின் புதிய பணிப்பாளர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர். (adaderana)




No comments