Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

ஹமாஸ் விடுவிக்கவுள்ள இஸ்ரேலியப் பணயக்கைதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு



 இரண்டாவது பணயக்கைதிகள் பரிமாற்றத்தில் ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்படவுள்ள 4 இஸ்ரேலியப் பணையக்கைதிகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


கரினா அரீவ், டேனியலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய பணயக்கைதிகளே அடுத்ததாக ஹமாஸால் விடுவிக்கப்படவுள்ளனர்.



குறித்த பணயக்கைதிகள் பரிமாற்றம் நாளையதினம்(25.01.2025) இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஞாயிற்றுக்கிழமை போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு இது இரண்டாவது பரிமாற்றம் ஆகும்.  


பரிமாற்றப்படவுள்ள நால்வரும் இஸ்ரேல் - காசா எல்லையை கண்காணித்த இராணுவ பிரிவொன்றில் செயற்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் 19 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல் பரிமாற்றத்தின் போது, 3 இஸ்ரேலியப் பணயக்கைதிகளும் 90 ஹமாஸ் சிறைக்கைதிகளும் பரிமாற்றப்பட்டனர்.


மேலும், 26 இஸ்ரேலிய பணயக்கைதிகள் ஹமாஸிடம் இருப்பதாகவும் அவர்கள் எதிர்வரும் 5 வாரங்களில் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 


2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு 251 பேர் பணயக்கைதிகளாக காசாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.



இதனையடுத்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஹமாஸ் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் தாக்குதலில் 46,800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.


இந்நிலையில், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் மத்தியக் கிழக்கில் ஒரு அமைதி நிலை உருவாகியுள்ளது. (Tamilwin )




No comments