Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

கட்டாருக்கான தூதுவராக பொறுப்பேற்ற முதலாவது பெண்!

 


கட்டாருக்கான இலங்கை தூதுவராக ரோஷன் சித்தாரா கான் அசாத் அண்மையில் டோஹாவில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.


கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் இவர் ஆவார்.


இலங்கையில் வெளியுறவு சேவை அதிகாரியாக 27 ஆண்டுகள் சேவை அனுபவத்தைக் கொண்ட சித்தாரா கான், 1998 ஆம் ஆண்டு வெளியுறவு சேவையில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.


வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் உட்பட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்துள்ள அவர், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.


சித்தாரா கான், கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரியின் முன்னாள் மாணவி ஆவார். (adaderana news)


No comments