Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானி நியமனம்

 



இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.


பிப்ரவரி 9 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


இராணுவத்தின் 45 ஆவது பிரதி பதவிநிலை பிரதானியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, கஜபா படைப்பிரிவில் இணைந்து பணியாற்றிய ஒரு புகழ்பெற்ற இராணுவ அதிகாரி ஆவார்.


மாத்தளையில் பிறந்த இவர், மாத்தளை விஜயா வித்தியாலயம் மற்றும் கண்டி தர்மராஜா வித்தியாலயத்தின் புகழ்பெற்ற பழைய மாணவராவார். மேலும் 1989 ஆம் ஆண்டு இராணுவத்தில் ஒரு கெடட் அதிகாரியாக இணைந்தமை குறிப்பிடத்தக்கது.(adaderana )


No comments