Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

மின் விநியோக தடை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

 


நாடாளவிய ரீதியில் இன்று முதல் தினசரி மின்வெட்டு இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.


மேலும், நேற்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.



அதற்கமைய, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை, தலா 4 மணி நேரம் கொண்ட 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 20 மண்டலங்களாக இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டதால், நுரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று ஜெனரேட்டர்களும் செயலிழந்தன.


இந்நிலையில் அவை விரைவாக சீர்செய்யப்பட்டு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மின்விநியோகம் வழமைக்கு திரும்புவதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. (Tamilwin )




No comments