கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் "ஹரக் கட்டா" என்று அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
"ஹரக் கட்டா" என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நதுன் சிந்தக விக்ரமரத்ன, கடந்த 14ம் திகதி வழக்கு ஒன்றிற்காக கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோதிலும், நீதிமன்ற வளாகத்திலிருந்து மீள அழைத்துச் செல்லப்பட்ட போது டிரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் குறித்து ஊடகங்களுக்கு இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று (15) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். - LSN


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc7iSWKkxjcnWpgsGxW2naGYGQQx828IVtrB6vxXxu3blxPVr4_K11ftbhJwo6ZfosL3u_C47PfGtfufXYcjOXgbHT5FgklsNWbNYvwUEBFX1LbWmt_L9XJronxUGJqcw2Dm5HEvPYwIcBfQ6LyBy0iFSGDjw-_btTdN9uWRGpQMUcDz_q9VYfAhq4EI0/s16000/harak-kata.jpg)

.jpg)


No comments